தமிழ் வாய்மொழி யின் அர்த்தம்

வாய்மொழி

பெயர்ச்சொல்

 • 1

  (எழுத்துமூலமாக இல்லாமல்) பேச்சின் மூலமாக வெளிப்படுத்தப்படுவது.

  ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்குமாறு அமைச்சர் வாய்மொழியாக உத்தரவிட்டார்’
  ‘‘வாய்மொழி ஆணை போதாது, எழுத்துமூலமாகத் தாருங்கள்’ என்று தொழிலாளர்கள் கோரினர்’

 • 2

  (மரபு, இலக்கியம் குறித்து வரும்போது) (எழுத்துமூலமாக அல்லாமல்) தலைமுறைதலைமுறையாகப் பேச்சின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டு வழங்கிவருவது.

  ‘நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழியாகவே வழங்கிவருகின்றன’

 • 3

  உயர் வழக்கு (ஒருவருடைய) உண்மையான கூற்று; சத்திய வாக்கு.

  ‘இது வள்ளுவர் வாய்மொழி’