தமிழ் வார் யின் அர்த்தம்

வார்

வினைச்சொல்வார்க்க, வார்த்து, வார, வார்ந்து

 • 1

  (உலோகம், மெழுகு போன்றவற்றை) உருக்கி (அச்சில்) ஊற்றுதல்; உருக்கி ஊற்றி உருவாக்குதல்.

  ‘பாத்திரம் வார்க்கும் வேலை’
  ‘பஞ்சலோகத்தில் வார்த்த சிலை’
  ‘இயந்திரத்தின் பாகங்கள் அச்சில் வார்த்துத் தயாரிக்கப்பட்டவை’

 • 2

  உயர் வழக்கு ஊற்றுதல்.

  ‘அவன் கை கழுவ அவள் நீர் வார்த்தாள்’
  ‘துளசிச் செடிக்கு நீர் வார்க்க வேண்டாமா?’
  ‘சாதத்தில் கொஞ்சம் நெய் வார்க்கட்டுமா?’

 • 3

  சமூக வழக்கு
  மாவை ஊற்றித் தோசை தயாரித்தல்.

  ‘இன்னும் ஒரு தோசை வார்க்கட்டுமா?’

தமிழ் வார் யின் அர்த்தம்

வார்

வினைச்சொல்வார்க்க, வார்த்து, வார, வார்ந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஈர்க்கிலிருந்து ஓலையை) கிழித்தல்.

  ‘பெட்டி இழைப்பதற்காகப் பனை ஓலையை வார்ந்துகொண்டிருந்தார்கள்’

தமிழ் வார் யின் அர்த்தம்

வார்

பெயர்ச்சொல்

 • 1

  பட்டையாக இருக்கும் தோல், துணி போன்றவை.

  ‘செருப்புக்கு வார் மாற்ற வேண்டும்’
  ‘பையின் வார் அறுந்துவிட்டது’

 • 2

  (கால்சட்டை போன்றவை இடுப்பில் இருப்பதற்காக) தேவையான அளவுக்கு இறுக்கிக்கொள்ளும்படி மெல்லியதாகவும் நீளமாகவும் இருக்கும் தோல் பட்டை.