தமிழ் வார்ப்பு யின் அர்த்தம்

வார்ப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (சிலை, நாணயம் முதலியவை செய்வதற்காக அச்சில் உலோகம் போன்றவற்றை) உருக்கி ஊற்றும் முறை/உருக்கி ஊற்றித் தயாரித்த பொருள்.

  ‘சோழர்காலச் செப்புத் திருமேனியின் வார்ப்புத்திறன் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகிறது’
  ‘எனக்கு வார்ப்பு வேலை மட்டும்தான் தெரியும்’
  ‘வார்ப்புச் சிலை’
  ‘இது வார்ப்பு, கீழே விழுந்தால் உடைந்துவிடும்’

 • 2

  வார்ப்பதற்கான அச்சு.

  ‘மெழுகு வார்ப்பு’
  ‘வார்ப்புகள் செய்துதரும் தொழிற்சாலை’