தமிழ் வாரு யின் அர்த்தம்

வாரு

வினைச்சொல்வார, வாரி

 • 1

  (பரவலாக அல்லது குவிந்து இருப்பதை) அள்ளுதல்; ஒருங்கே சேர்த்து எடுத்தல்.

  ‘கிணற்றைத் தூர் வார ஆள் வேண்டும்’
  ‘அறையில் இருக்கும் குப்பைகளை வாரி வெளியில் கொட்டு!’
  ‘நெல்லை வாரிக் குவித்தனர்’
  ‘அவருடைய பேச்சு நெருப்பை வாரிக் கொட்டுவது போல் இருந்தது’

 • 2

  (முடியைச் சீப்பால் இழுத்து) சீவுதல்.

  ‘தலையை வாரிக்கொண்டு கிளம்பு!’
  ‘தூக்கி வாரப்பட்ட தலைமுடி’

 • 3

  (விழச் செய்கிற வகையில் காலை) இழுத்தல்; இடறிவிடுதல்.

  ‘காலை வாரிவிட்டுக் கீழே தள்ளினான்’