தமிழ் வாழை யின் அர்த்தம்

வாழை

பெயர்ச்சொல்

 • 1

  இனிப்புச்சுவை மிகுந்த பழத்தைத் தருவதும் உரித்தெடுக்கக்கூடிய மட்டைகளால் ஆனதும் நீண்ட, பெரிய இலைகளை உடையதுமான ஒரு வகை மரம்.

  ‘வாழைக் கன்று’
  ‘கல்யாணப் பந்தலின் முகப்பில் இரண்டு பக்கத்திலும் வாழை மரத்தைக் கட்டியிருந்தார்கள்’
  ‘வாழை இன்னும் குலைதள்ளவில்லை’
  ‘வாழை இலையில் சாப்பாடு’