தமிழ் விசித்திரம் யின் அர்த்தம்

விசித்திரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.

  ‘நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளமும் மற்றொரு பகுதியில் வறட்சியும் காணப்படுவது விசித்திரமாக இருக்கிறது’
  ‘காண்டாமிருகம் விசித்திரமான தோற்றமுடைய மிருகம் ஆகும்’
  ‘பத்திரிகையில் ‘குடிகாரர்கள் தேவை’ என்று ஒரு விசித்திர விளம்பரம் வந்திருந்தது’
  ‘உண்மையிலேயே நீங்கள் ஒரு விசித்திரப் பிறவிதான்’
  ‘நேற்று நான் ஒரு விசித்திரமான கனவைக் கண்டேன்’
  ‘‘என்னைக் கடவுளாக அறிவிக்க வேண்டும்’ என்று ஒருவர் ஒரு விசித்திர வழக்கைத் தொடர்ந்தார்’