தமிழ் விசேஷ யின் அர்த்தம்

விசேஷ

பெயரடை

 • 1

  தேவைக்காகவும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட; பிரத்தியேகமான; சிறப்பான.

  ‘வர்த்தகக் கண்காட்சிக்காக விசேஷப் பேருந்துகள் விடப்பட்டன’
  ‘விசேஷ இருதயச் சிகிச்சைப் பிரிவு’
  ‘இது விசேஷக் கவனம் செலுத்திக் கட்டிய வீடு’
  ‘விளையாட்டைப் பார்ப்பதற்காகக் குழந்தைகளுக்கு விசேஷ அனுமதி வழங்கப்பட்டது’
  ‘புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் விசேஷப் பூஜைகள் நடந்தன’
  ‘நீங்கள் அரசியலிலிருந்து விலகுவதற்கு ஏதாவது விசேஷக் காரணங்கள் உண்டா என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டார்’
  ‘குழந்தைகள் விஷயத்தில் விசேஷக் கவனம் செலுத்த வேண்டும்’
  ‘ஒவ்வொரு கலையும் மனிதனின் விசேஷக் கலையுணர்வைத் தூண்டுவதாக அமைந்துள்ளது’