தமிழ் விஜயம் யின் அர்த்தம்

விஜயம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவரின்) வரவு; (முக்கியமான நபர் ஓர் இடத்திற்கு) வருகை தருதல்.

    ‘அமைச்சரின் திடீர் விஜயத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது’
    ‘அயல்நாட்டுப் பிரதமரின் விஜயத்தை ஒட்டி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’
    ‘எங்கள் நகை மாளிகைக்கு விஜயம்செய்யுங்கள்’