தமிழ் விட்டு யின் அர்த்தம்

விட்டு

இடைச்சொல்

 • 1

  ‘தவிர்த்து’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘ஒரு நாள்விட்டு ஒரு நாள்தான் குடிநீர் வழங்கப்படுகிறது’

 • 2

  நீங்குதல் பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘இருந்து’.

  ‘தம் பெற்றோரைவிட்டுப் பிரிந்த குழந்தைகள்’
  ‘இந்த வண்டி எப்போது இந்த ஊரைவிட்டுப் புறப்படும்?’