தமிழ் விட்டுக்கொடு யின் அர்த்தம்

விட்டுக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  (பிரச்சினை, வாக்குவாதம் போன்றவற்றில் ஒருவர் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு மற்றவருக்கு) இணங்கிப்போதல்.

  ‘அவன் குணம் தெரிந்ததால் நாங்கள் அவனுக்கு விட்டுக்கொடுத்தோம்’
  ‘கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் நடத்த முடியும்’
  ‘விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்’

 • 2

  தனக்குக் கிடைக்க வேண்டிய பயன், சாதகமான நிலை போன்றவற்றைப் பிறர் அனுபவிக்கவோ பெறவோ விடுதல்.

  ‘வீட்டை அண்ணன் எனக்கே விட்டுக்கொடுத்துவிட்டான்’
  ‘நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியினர் விட்டுக்கொடுப்பதுபோல் ஆடினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது’
  ‘நான் விட்டுக்கொடுத்ததால்தான் அவருக்கு இந்தப் பதவி கிடைத்தது என்று நண்பர் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்’

 • 3

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (தனக்கு வேண்டிய ஒருவரைப் பிறர்) தாழ்த்திக் கூற அனுமதித்தல் அல்லது (தனக்கு வேண்டிய ஒருவரைப் பிறரிடம்) தாழ்த்திக் கூறுதல்.

  ‘அண்ணன் தம்பிகள் இடையே மனக்கசப்பு இருந்தாலும் மற்றவரிடம் பேசும்போது விட்டுக்கொடுக்க மாட்டார்கள்’