தமிழ் விட்டுப்பிடி யின் அர்த்தம்

விட்டுப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (ஒருவரை உடனடியாக அவருடைய நிலையிலிருந்து மாற்ற முடியாது என்பதால் அவரைக் கொஞ்ச காலத்துக்கு அவருடைய) போக்கில் விடுதல்.

    ‘பையனைக் கொஞ்சம் விட்டுப்பிடியுங்கள், தானாக வழிக்கு வருவான்’
    ‘தொழிலாளர்களை விட்டுப்பிடிக்க வேண்டும் என்று நிர்வாக இயக்குநர் நினைக்கிறார்’