தமிழ் விடுதலை யின் அர்த்தம்

விடுதலை

பெயர்ச்சொல்

 • 1

  (சிறை, கூண்டு போன்றவற்றிலிருந்து) வெளியே வரும் அல்லது வெளியே விடப்படும் நிலை.

  ‘நாளை அந்தக் கைதிக்கு விடுதலை’
  ‘கூண்டைத் திறந்துவிட்டதும் விடுதலை பெற்றுப் பறந்தது கிளி’

 • 2

  ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு அடிமையாக இருந்த நிலை முற்றிலும் நீங்கிய நிலை; சுதந்திரம்.

  ‘நம் நாடு விடுதலை அடைவதற்குப் பல்லாயிரக் கணக்கானோர் பாடுபட்டிருக்கிறார்கள்’

 • 3

  (பந்தம், பாசம், கருமம் முதலியவற்றிலிருந்து) விடுபட்ட நிலை.

 • 4

  (நோய், பாதிப்பு போன்றவற்றிலிருந்து) முற்றிலுமாக விடுபட்ட நிலை.

  ‘இந்த மூலிகையைச் சாப்பிடுவதன்மூலம் நோயிலிருந்து விடுதலை பெறலாம்’
  ‘ஓயாத தலைவலியிலிருந்து என்றுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ?’