தமிழ் விடுப்பு யின் அர்த்தம்

விடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட காரணத்தால் (அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றில்) பணிக்கோ (கல்லூரி, பள்ளி போன்றவற்றில்) வகுப்புக்கோ செல்லாமல் இருப்பதற்காக முன்கூட்டியே பெறப்படும் காலவரையறைக்கு உட்பட்ட அதிகாரபூர்வமான அனுமதி/அவ்வாறு அனுமதி பெற்று பணிக்கோ வகுப்புக்கோ செல்லாமல் இருக்கும் நிலை.

    ‘நீ உடனடியாக விடுப்பு எடுத்துக்கொண்டு புறப்பட்டு வரவும்’
    ‘நீண்ட நாள் விடுப்பில் இருந்தவர் இப்போதுதான் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்’
    ‘பிரசவ விடுப்பு’