தமிழ் விடுவி யின் அர்த்தம்

விடுவி

வினைச்சொல்விடுவிக்க, விடுவித்து

 • 1

  (அடைபட்டு அல்லது கட்டுண்டு இருக்கும் நிலையிலிருந்து) விடுபடச் செய்தல்.

  ‘தீவிரவாதிகளிடமிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கை வெற்றி பெறவில்லை’
  ‘உடனடியாக அவரைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்’

 • 2

  பேச்சு வழக்கு (புதிர் அல்லது விடுகதையில்) விடையைக் கண்டறிதல்.

  ‘நான் போடும் புதிரை நீ விடுவித்தால் இரண்டு ரூபாய் தருகிறேன்’