தமிழ் விபரீதம் யின் அர்த்தம்

விபரீதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அச்சம் அல்லது அதிர்ச்சி கொள்ளவைக்கும் மோசமான விளைவு.

  ‘விளையாட்டாக ஆரம்பித்தது விபரீதத்தில் முடிந்துவிட்டது’
  ‘கோபப்பட்டுக் கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்பியவனைத் தடுக்காமல் விட்டிருந்தால் விபரீதம் நேர்ந்திருக்கும்’

 • 2

  சாதாரணமாக இல்லாததும் தவறானதும்; விசித்திரம்.

  ‘ரயிலில் ஒரு தடவையாவது அபாயச் சங்கிலியை இழுத்துப்பார்க்க வேண்டுமா? உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை?’