தமிழ் வியாக்கியானம் யின் அர்த்தம்

வியாக்கியானம்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு (நூலுக்கு) விளக்க உரை.

    ‘மூலத்தைப் படித்தால் புரிகிறது. வியாக்கியானம் புரியவில்லை’

  • 2

    (எரிச்சலான தொனியில் கூறும்போது) ஒரு செயலுக்கான விளக்கம்.

    ‘தப்புச் செய்துவிட்டு அதற்கு வியாக்கியானம் வேறா?’