தமிழ் வியூகம் யின் அர்த்தம்

வியூகம்

பெயர்ச்சொல்

 • 1

  தாக்குவதற்காக அல்லது தற்காத்துக்கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்படுத்திக்கொள்ளும் அணிவகுப்பு.

  ‘சக்கர வியூகம் அமைத்துப் படைகள் போரிட்டன’
  உரு வழக்கு ‘பறவைகள் ஒரு வியூகத்தில் பறந்து சென்றன’

 • 2

  ஒரு குறிக்கோளை அடைவதற்கான உத்திகளும் அவற்றைச் செயல்படுத்துதலும்.

  ‘எதிரணியை வீழ்த்த நாங்கள் வியூகம் ஒன்று வைத்திருக்கிறோம்’
  ‘அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை கூடும் பொதுக்குழு வியூகம் வகுக்கும்’