தமிழ் விரதம் யின் அர்த்தம்

விரதம்

பெயர்ச்சொல்

 • 1

  உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு; நோன்பு.

  ‘அவருக்கு குணமாக வேண்டும் என்று ஒரு மண்டலம் விரதம் இருந்தேன்’
  ‘அம்மா வெள்ளிக்கிழமை விரதம் இருக்கத் தவறுவதே இல்லை’

 • 2

  (ஒன்றைச் செய்வது அல்லது செய்யாமல் இருப்பது என்று கொள்ளும்) உறுதி.

  ‘எப்படியும் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று விரதம் பூண்டாள்’
  ‘என்னோடு பேசுவதில்லை என்று விரதமா?’