தமிழ் விரிப்பு யின் அர்த்தம்

விரிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பரப்பின் மேல் அலங்கரிக்கும் விதத்தில்) விரித்து வைக்கப்படுவது அல்லது விரித்திருப்பது.

  ‘மேஜை விரிப்பு’
  ‘தரை விரிப்பு’
  ‘கம்பள விரிப்பு’
  ‘இங்கு குறைந்த விலையில் பல வண்ணங்களில் படுக்கை விரிப்புகள் கிடைக்கும்’

 • 2

  ஒரு பக்கத்தை மறைக்கும் விதத்தில் கட்டித் தொங்கவிடப்படுவது.

  ‘திண்ணைக்கு மறைப்பாக ஒரு சாக்கு விரிப்புத் தொங்கிக்கொண்டிருந்தது’