தமிழ் விருத்தம் யின் அர்த்தம்

விருத்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (தாயம் போன்ற விளையாட்டில்) அடுத்தடுத்துத் தொடர்ந்து கிடைக்கும் பெரிய எண்கள்.

தமிழ் விருத்தம் யின் அர்த்தம்

விருத்தம்

பெயர்ச்சொல்

 • 1

  இலக்கணம்
  பா வகைகளுள் ஒன்று.

  ‘சீவகசிந்தாமணி விருத்தப் பாக்களால் ஆன நூல்’

 • 2

  இசைத்துறை
  தமிழ்ப் பாடல்களைத் தாளத்தில் அமைத்துப் பாடாமல், பாடகரின் கற்பனைக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட ராகங்களில் அமைத்துப் பாடும் இசை வடிவம்.

  ‘நாச்சியார் திருமொழியை விருத்தமாகக்கூடப் பாடலாம்’