தமிழ் விற்பனை யின் அர்த்தம்

விற்பனை

பெயர்ச்சொல்

 • 1

  பணம் பெற்றுக்கொண்டு அல்லது கடனுக்குப் பொருள், சேவை, பங்கு போன்றவற்றைத் தருவது; விற்கப்படுவது.

  ‘கடையில் அவர் விற்பனையைக் கவனித்துக் கொண்டிருந்தார்’
  ‘இது தமிழ்நாட்டில் அதிகமாக விற்பனையாகும் பத்திரிகை’
  ‘பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து கோழி இறைச்சியின் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது’
  ‘மகளிர் சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புகள் பொருட்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன’
  ‘கோடைக் காலம் தொடங்கியதுமே குளிர்பானங்களின் விற்பனை உச்சத்தை எட்டுகிறது’