தமிழ் விலங்கு யின் அர்த்தம்

விலங்கு

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்; (குறிப்பாக) நான்கு கால்களுடைய, குட்டி போட்டுப் பால் தரும் இனம்.

  ‘திமிங்கலம் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு’

தமிழ் விலங்கு யின் அர்த்தம்

விலங்கு

பெயர்ச்சொல்

 • 1

  (கைதியின் கை, கால்களைப் பிணைக்கும் வகையில்) பூட்டும் அமைப்பைக் கொண்ட, வளையம் கோத்த சங்கிலி.

  ‘திருடனைப் பிடித்தவுடன் கையில் விலங்கு மாட்டினார்’
  ‘காலில் விலங்கு மாட்டிக் கொண்டுவரப்பட்டான்’
  உரு வழக்கு ‘அடிமை விலங்கை உடைத்தெறியவே சுதந்திரப் போராட்டம் நடந்தது’

தமிழ் விலங்கு யின் அர்த்தம்

விலங்கு

பெயர்ச்சொல்

 • 1

  இ, ஈ, உ, ஊ ஆகிய உயிர் எழுத்துகளைச் சுட்டிக்காட்ட உயிர்மெய்யெழுத்தின் மேலே அல்லது கீழே வளைவாகப் போடப்படும் அடையாளக் குறி.

  ‘‘கி’ என்பது மேல் விலங்கும் ‘கு’ என்பது கீழ் விலங்கும் பெற்றுள்ளன’