தமிழ் விலை யின் அர்த்தம்

விலை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றை விற்கும்போது அல்லது வாங்கும்போது) பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு.

  ‘தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேயிருக்கிறது’
  ‘பறவைக்காய்ச்சலை அடுத்து முட்டையின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது’
  ‘இந்தப் புத்தகத்தின் விலை நூறு ரூபாய்’
  ‘இங்கு எல்லாப் பொருள்களும் நியாயமான விலைக்குக் கிடைக்கும்’
  ‘வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசமே லாபத்தை அல்லது நஷ்டத்தை நிர்ணயிக்கிறது’