தமிழ் விலைபோ யின் அர்த்தம்

விலைபோ

வினைச்சொல்-போக, -போய்

 • 1

  விற்பனையாதல்.

  ‘நாள்பட்ட சரக்குகள் விலைபோவது கஷ்டம்’
  ‘வஞ்சிரம், வாளை போன்ற மீன்கள் சந்தையில் எளிதாக விலைபோகும்’

 • 2

  (ஒருவரின் சாமர்த்தியம், தந்திரம் போன்றவை) செல்லுபடியாதல்; எடுபடுதல்.

  ‘அவனிடம் உன் தந்திரமெல்லாம் விலைபோகாது’
  ‘உன் ஏமாற்று வேலைகள் யாராவது இளிச்சவாயனிடம்தான் விலைபோகும்’

 • 3

  பணம், பதவி முதலிய ஆதாயங்களுக்காக ஒருவர் தனது கொள்கை, நிலை போன்றவற்றிலிருந்து மாறுதல்.

  ‘பொதுவுடைமை பேசிக்கொண்டிருந்தவர் இப்போது ஆலை முதலாளிகளிடம் விலைபோய்விட்டார் என்று உங்களைப் பற்றி ஒரு விமர்சனம் எழுந்துள்ளதே?’