தமிழ் விளக்கு யின் அர்த்தம்

விளக்கு

வினைச்சொல்விளக்க, விளக்கி

 • 1

  ஒன்றைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் வகையில் அதை விரிவாக விவரித்தல்.

  ‘செய்தி எப்படிக் கிடைத்தது என்று விளக்குவதற்கு நேரம் இல்லை’
  ‘உலோகத்துக்கும் அலோகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக’
  ‘மூளையின் பகுதிகளை விளக்கும் படம்’
  ‘அங்கே என்ன நடந்தது என்பதை உங்களால் விளக்க முடியுமா?’
  ‘எங்களுக்கு மொழியியல்பற்றி பேராசிரியர் எளிமையாக விளக்கினார்’
  ‘இது விளக்க முடியாத புதிர்’
  ‘முந்தைய கட்டுரையில் கரகாட்டம் பற்றி விளக்கியுள்ளேன்’
  ‘இந்தத் திட்டத்தைப் பற்றி இன்னும் சற்று விளக்கிக் கூறினால் நன்றாக இருக்கும்’

தமிழ் விளக்கு யின் அர்த்தம்

விளக்கு

வினைச்சொல்விளக்க, விளக்கி

 • 1

  (பாத்திரம், பூஜைப் பொருள்கள் முதலியவற்றை) துலக்குதல்.

  ‘சாப்பிட்ட தட்டை விளக்கிக் கவிழ்த்தான்’

 • 2

  (பற்களை) சுத்தம் செய்தல்.

  ‘காலையில் பல் விளக்காமல் அவள் தண்ணீர்கூடக் குடிக்க மாட்டாள்’

தமிழ் விளக்கு யின் அர்த்தம்

விளக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (மின்சாரம், எண்ணெய் முதலியவற்றின் சக்தியால்) ஒளி தரும் சாதனம்.

  ‘வாசல் விளக்கைப் போடு’
  ‘ஒரு பக்கத்து விளக்கு சரியாக எரியாததால் கார் மெதுவாகச் சென்றது’
  ‘விளக்கின் வெளிச்சம் ஜன்னல் வழியே உள்ளே வந்தது’
  ‘மஞ்சள் விளக்கு அணைந்ததும் பச்சை விளக்கு எரிந்தது’
  ‘சாண எரிவாயு கொண்டு விளக்குகளை எரிக்கலாம்’

 • 2

  கடவுள் வழிபாட்டில் அல்லது சடங்குகளில் ஏற்றிவைக்கப்படும் சுடர்விடும் சாதனம்.

  ‘குளித்துவிட்டு வந்து முருகன் படத்திற்கு முன் விளக்கை ஏற்றினான்’
  ‘துர்க்கைக்கு நெய் விளக்குப் போடுவதாக வேண்டிக்கொண்டாள்’
  ‘இறந்தவருடைய தலைமாட்டில் விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது’