தமிழ் விளையாட்டுக்காட்டு யின் அர்த்தம்

விளையாட்டுக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (குழந்தைகளுக்கு) வேடிக்கை காட்டுதல்.

    ‘கிலுகிலுப்பை கொண்டுவா, குழந்தைக்கு விளையாட்டுக்காட்டலாம்’

  • 2

    பேச்சு வழக்கு (ஒன்று அல்லது ஒருவர்) தொல்லை ஏற்படுத்தும் விதத்தில் இருத்தல் அல்லது நடந்துகொள்ளுதல்.

    ‘கொடுத்த கடனைக் கேட்கப்போனால் ‘இன்று தருகிறேன், நாளை தருகிறேன்’ என்று விளையாட்டுக்காட்டுகிறான்’