விழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விழி1விழி2

விழி1

வினைச்சொல்விழிக்க, விழித்து

 • 1

  (உறக்கம், மயக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு) கண்களைத் திறத்தல்; கண்களைத் திறந்து சுய உணர்வு நிலைக்கு வருதல்/தூங்காமல் இருத்தல்.

  ‘சட்டென்று விழித்துக்கொண்டேன்’
  ‘மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்தார்’
  ‘பயத்தில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்தவாறு இருந்தான்’

 • 2

  (பெரும்பாலும் ‘எந்த விதமாக’ என்பதைக் காட்டும் அடையோடு வரும்போது) பார்த்தல்.

  ‘கேள்விக்கு பதில் தெரியாமல் திருதிருவென்று விழித்தான்’
  ‘அவர் கண்களை உருட்டி விழித்தார். சிறுவர்கள் எல்லோரும் பயந்துவிட்டார்கள்’

விழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விழி1விழி2

விழி2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு கண்.

  ‘அவள் விழிகளில் நீர்’
  ‘எதிர்பாராமல் நண்பனைக் கண்டதும் அவர் விழிகள் வியப்பினால் விரிந்தன’
  ‘அவன் விழி பிதுங்கிச் செத்தான்’