தமிழ் விவரம் யின் அர்த்தம்

விவரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றை) தெளிவாக அறிந்துகொள்வதற்கு வகைசெய்யும் தகவல்.

  ‘நடந்த கலவரம் பற்றி விவரம் சொல்லவே மக்கள் அஞ்சுகிறார்கள்’
  ‘மாணவர் சேர்க்கைபற்றி மேலும் விவரம் அறிய பள்ளி நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்’
  ‘இந்த நூலைப் படிக்கும்போது சில சுவாரசியமான விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன’
  ‘புயலால் எவ்வளவு சேதம் என்பது பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை’
  ‘போரில் உயிர் நீத்த வீரர்களைப் பற்றிய விவரம் இந்தக் கல்வெட்டில் தரப்பட்டுள்ளது’
  ‘கிராமத்திலிருக்கும் மாமா ஏதாவது விவரம் சொல்லி அனுப்பியிருக்கிறாரா?’

 • 2

  (எழுத்து, பேச்சு போன்றவற்றைக் குறித்து வரும்போது) விரிவானது அல்லது விளக்கமானது.

  ‘சுற்றுலா போனதைப் பற்றி விவரமாகச் சொல்’
  ‘தொல்பொருள் ஆராய்ச்சிபற்றி விவரமான கட்டுரை எழுதித் தருமாறு பத்திரிகை ஆசிரியர் கேட்டார்’
  ‘தான் வெளிநாடு போய்வந்ததைப் பற்றி நண்பரிடம் விவரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்’
  ‘வீடு விற்பதைப் பற்றி அடுத்த கடிதத்தில் விவரமாக எழுதுகிறேன்’

 • 3

  எந்தச் சூழலில் எப்படி நடந்துகொள்வது என்ற நடைமுறை அறிவு.

  ‘ஆள் விவரமானவர்தான். எதையும் குழப்பிக்கொள்ள மாட்டார்’
  ‘இந்தக் காலத்துக் குழந்தைகள் மிகவும் விவரமானவர்கள்’