தமிழ் விஸ்வரூபம் யின் அர்த்தம்

விஸ்வரூபம்

பெயர்ச்சொல்

 • 1

  (புராணத்தில்) (இறைவன் எடுத்த) உலகம் அனைத்தையும் நிறைத்த உருவம்.

  ‘குருக்ஷேத்திரத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் தந்தார்’

 • 2

  ஒன்று அல்லது ஒருவர் தனது திறமை, செல்வாக்கு போன்றவற்றை அதிக அளவு வெளிப்படுத்தும் நிலை.

  ‘ஆரம்ப காலத்தில் சாதாரண அணியாகக் கருதப்பட்ட இலங்கை அணி தொண்ணூறுகளில் விஸ்வரூபம் எடுத்தது’
  ‘‘வரப்போகும் திரைப்படத்தில் எனது விஸ்வரூபத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்’ என்று அந்த இயக்குநர் நிருபர்களிடம் சொன்னார்’

 • 3

  (ஒரு தன்மை, நிலைமை) உச்சத்தை அல்லது தீவிரத்தை அடையும் நிலை.

  ‘இனப் பிரச்சினையின் விஸ்வரூபம் அரசுக்குச் சவாலாகிவிட்டது’
  ‘அவரது கோபம் விஸ்வரூபம் எடுத்தது’
  ‘இளவரசியை மணக்க வேண்டும் என்ற ஆசை தளபதியின் மனத்தில் விஸ்வரூபம் எடுத்தது’