தமிழ் வெட்டவெளிச்சம் யின் அர்த்தம்

வெட்டவெளிச்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு மோசமான செயல், தன்மை போன்றவை வெளிப்பட்டு) எல்லோராலும் அறியப்படும் நிலை; வெளிப்படை.

  ‘அலுவலகத்தில் அவன் செய்த தில்லுமுல்லுகள் வெட்டவெளிச்சமாகிவிட்டன’
  ‘இது சாதாரணத் தொழில் தகராறு என்று கூறிவந்தது உண்மை அல்ல என்பது வெட்டவெளிச்சம்’

 • 2

  எதையும் தெளிவாகப் பார்க்கக்கூடிய அளவுக்குப் பிரகாசம்.

  ‘பட்டப்பகலில் வெட்டவெளிச்சத்தில் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது’