தமிழ் வெற்றிலைபாக்கு மாற்று யின் அர்த்தம்

வெற்றிலைபாக்கு மாற்று

வினைச்சொல்மாற்ற, மாற்றி

  • 1

    வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவை உள்ள தட்டுகளைப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதன் மூலம் திருமணத்தை நிச்சயித்தல்.

    ‘அடுத்த மாதம் அமாவாசைக்குப் பிறகு வெற்றிலைபாக்கு மாற்றிக்கொள்ளலாமா?’
    ‘பெண் பிடித்துப்போய்விட்டால் அப்போதே வெற்றிலைபாக்கு மாற்றிக் கொண்டுவிடலாம்’