தமிழ் வெற்று யின் அர்த்தம்

வெற்று

பெயரடை

 • 1

  (ஒன்றில் இருக்க வேண்டியது) எதுவும் இல்லாத; வெறும்.

  ‘வெற்றுத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்திவிட்டான்’
  ‘வெற்றுத் தாள்களை வைத்துக்கட்டி, பணம் என்று கொடுத்து நம்மை ஏமாற்றியிருக்கிறான்’
  ‘வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காதே!’

 • 2

  பயனற்ற; வீணான.

  ‘பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் நாம் இதுவரை வெற்றுப் பேச்சுதான் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்’
  ‘கையில் காசு இல்லாவிட்டாலும் இந்த வெற்று கௌரவத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை’

 • 3

  நோக்கம் எதுவும் இல்லாத.

  ‘வெற்றுப் பார்வை’

 • 4

  உடை, கண்ணாடி போன்றவை அணியாத.

  ‘வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத கிருமிகள்’
  ‘வெற்றுடம்புடன் வாசலில் நின்றுகொண்டிருந்தான்’