தமிழ் வெள்ளோட்டம் யின் அர்த்தம்

வெள்ளோட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (புதிய கப்பல், விமானம் முதலியவற்றிற்கான) சோதனை ஓட்டம்.

  ‘நவீன வசதிகளுடன் புதிய முட்டுக்கப்பல் ஒன்று வாங்கப்பட்டு வியாழக்கிழமை அன்று வெள்ளோட்டம் விடப்பட்டது’
  ‘தங்க ரத வெள்ளோட்டம் வரும் 27ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது’
  உரு வழக்கு ‘இந்த இடைத்தேர்தல் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டம் என்கிறார் அவர்’

 • 2

  அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு சோதனைக்காக ஒன்றைச் செய்யும் நிலை.

  ‘காசநோய்க்கான புதிய மருந்துகள் சில வெள்ளோட்டத்தில் இருக்கின்றன’