தமிழ் வெளியீடு யின் அர்த்தம்

வெளியீடு

பெயர்ச்சொல்

 • 1

  (அச்சடிக்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டுப் பொதுமக்களுக்காக) வெளியிடப்படுதல்.

  ‘புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்’
  ‘புதிய பங்குப் பத்திரங்களின் வெளியீடு நாளை தொடங்கும்’
  ‘அஞ்சல் தலை வெளியீட்டு விழா’

 • 2

  (வெளியிடப்பட்ட) நூல், திரைப்படம் போன்றவற்றைப் பொதுவாகக் குறிக்கும் சொல்.

  ‘எங்களிடம் எல்லாப் பதிப்பகத்தாரின் வெளியீடுகளும் கிடைக்கும்’
  ‘இந்தத் திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தின் வெளியீடு’

 • 3

  (எண்ணம், கற்பனை முதலியவற்றை) வெளிப்படுத்துவது; வெளிப்பாடு.

  ‘கருத்து வெளியீட்டுச் சுதந்திரம்’
  ‘வெளியீட்டுத்திறன் உள்ளவன் கலைஞன் ஆகிறான்’