தமிழ் வேட்டை யின் அர்த்தம்

வேட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதன் உணவுக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ விலங்குகளையும் பறவைகளையும்) தேடித் துரத்திப் பிடிக்கும் அல்லது கொல்லும் செயல்; (விலங்குகள் தம் இரையை) துரத்திக் கொல்லுவது.

  ‘இன்னும் சில பழங்குடியினர் வேட்டையைத்தான் தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்’
  ‘புலி வேட்டை தடைசெய்யப்பட்டுள்ளது’
  ‘வேட்டைத் துப்பாக்கி’

 • 2

  (மேற்குறிப்பிட்ட செயலில்) கொல்லப்பட்ட அல்லது பிடிக்கப்பட்ட விலங்கு அல்லது பறவை.

  ‘‘இன்றைக்கு நல்ல வேட்டை’ என்று கூறிக்கொண்டு காடைகளைத் தலைகீழாகப் பிடித்தவாறே உள்ளே வந்தார்’

 • 3

  தீவிரமாகத் தேடிப் பிடிக்கும் செயல்.

  ‘மாநில அளவில் காவல்துறையினர் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்’
  ‘கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்’

 • 4

  ஒன்றைப் பெறுவதற்காக மிகத் தீவிரமாகவும் அதிக அளவிலும் செய்யும் நிலை.

  ‘வசூல் வேட்டை’
  ‘வாக்கு வேட்டை’