தமிழ் வேடிக்கை பார் யின் அர்த்தம்

வேடிக்கை பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

 • 1

  (தன்னைச் சுற்றி நிகழ்வதை அல்லது இருப்பதை) பொழுதுபோக்கும் விதத்திலோ ஈடுபாட்டுடனோ பார்த்துக்கொண்டிருத்தல்.

  ‘வேலையைப் பார்க்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’
  ‘ரயிலின் ஜன்னல் வழியாகக் குழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தது’
  ‘கழைக்கூத்தாடிச் சிறுமி கயிற்றில் நடப்பதை அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்’

 • 2

  (பிறர் மோசமாக நடத்தப்படும்போது அல்லது தவறு, ஊழல் போன்றவை நடக்கும்போது) தேவையானது எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருத்தல்.

  ‘நீ அவனை அடித்தால் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போமா?’
  ‘அன்றைக்கு அவன் என்னை அடிக்கும்போது நீ வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே இருந்தாய்’
  ‘இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராமல் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று அவர் விமர்சித்தார்’