தமிழ் வேடுகட்டு யின் அர்த்தம்

வேடுகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (பானை, குடம், கூடை போன்றவற்றை) துணியால் மூடிக் கட்டுதல்.

    ‘தயிர்ப் பானை இறுக்கமாக வேடுகட்டப்பட்டிருந்தது’
    ‘கள்ளைப் பானையில் ஊற்றி வேடுகட்டி வைத்திருந்தார்கள்’