தமிழ் வேதம் யின் அர்த்தம்

வேதம்

பெயர்ச்சொல்

 • 1

  இந்து சமயத்திற்கு ஆதாரமான நெறிமுறைகளைக் கூறுவதாகவும் புராதன காலத்தில் தோன்றியதாகவும் புனிதமானதாகவும் கருதப்படும் நூல் அல்லது நூல்களின் தொகுப்பு.

  ‘சுவாமிகளுக்கு அபார வேத ஞானம் உண்டு’
  ‘இளம் வயதிலேயே காசிக்குச் சென்று வடமொழியையும் வேதங்களையும் கற்றார்’
  ‘வேதங்கள் நான்கு வகைப்படும்’

 • 2

  (பொதுவாகக் குறிப்பிடும்போது) ஒரு மதத்துக்குப் புனிதமானதாகக் கருதப்படும் புராதன நூல்.

  ‘ஆதி கிரந்தம் என்பது சீக்கியர்களின் வேதம் ஆகும்’

 • 3

  வேதவாக்கு.

  ‘பெரியவர் சொல்வதுதான் எங்களுக்கு வேதம்’

 • 4

  கிறித்தவ வழக்கு
  விவிலியம்.