தமிழ் வேப்பிலை அடி யின் அர்த்தம்

வேப்பிலை அடி

வினைச்சொல்அடிக்க, அடித்து

 • 1

  (பேய்பிடித்திருப்பதாக நம்பும் ஒருவரை அல்லது நோய் போன்றவற்றால் பீடிக்கப்பட்டிருப்பவரைப் பூசாரி, மந்திரவாதி போன்றோர்) வேப்பிலைக் கொத்தால் அடித்து மந்திரம் சொல்லிக் குணப்படுத்துதல்.

  ‘பிள்ளைக்கு ஒரு வாரமாகக் காய்ச்சல் என்று என் மனைவி மேலத் தெரு பூசாரியிடம் வேப்பிலை அடிக்கப் போயிருக்கிறாள்’

 • 2

  (ஒன்றைத் திரும்பத்திரும்பக் கூறுவதன்மூலம் ஒருவரின்) மனத்தை மாற்றுதல்.

  ‘என்னப்பா! மருத்துவக் கல்லூரியில்தான் சேர வேண்டும் என்று உன் அப்பா உனக்கு வேப்பிலை அடிக்கிறாரா?’
  ‘உன் பெண்டாட்டி நன்றாக வேப்பிலை அடித்திருக்கிறாள். அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருக்கிறாயே?’