தமிழ் வேர் யின் அர்த்தம்

வேர்

வினைச்சொல்வேர்க்க, வேர்த்து

தமிழ் வேர் யின் அர்த்தம்

வேர்

பெயர்ச்சொல்

 • 1

  தாவரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான சத்தையும் நீரையும் பெறும்பொருட்டு அடிப்பாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் பாகம்.

  ‘வேர் அமைப்பைப் பொருத்துத் தாவரங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்’

 • 2

  (முடியின்) அடிப்பகுதி; ரோமக்கால்.

  ‘ரோமத்தின் வேரில் உள்ள கிருமிகள்தான் உடல் துர்நாற்றத்துக்குக் காரணமாகின்றன’

 • 3

  (பரு, கட்டி போன்றவற்றின்) முளை.

  ‘பருவிலிருந்து சீழும் ரத்தமும் வந்த பிறகு அதன் வேர் வெளிப்பட்டது’