தமிழ் வேலைவெட்டி யின் அர்த்தம்

வேலைவெட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவர்) செய்ய வேண்டியதாக இருக்கும் ஏதேனும் ஒரு வேலை.

  ‘வீட்டில் போய் ஏதாவது வேலைவெட்டி இருந்தால் அதைப் பார்!’
  ‘வேலைவெட்டி இல்லாத பயல்கள் ஏதாவது வம்பு பேசுவார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாதே!’
  ‘உன்னோடு சாவகாசமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கு நான் என்ன வேலைவெட்டி இல்லாதவனா?’

 • 2

  பேச்சு வழக்கு வேலை; தொழில்.

  ‘ஏதாவது வேலைவெட்டி செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று பட்டணத்துக்கு ஓடிவந்தேன்’
  ‘வேலைவெட்டிக்குப் போய்ச் சம்பாதிக்கிற வழியைப் பார்!’