தமிழ் வேலைவை யின் அர்த்தம்

வேலைவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  ஒருவர் ஒன்றைக் கட்டாயமாகச் செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாக்குதல்.

  ‘உதவி செய்கிறேன் என்று வந்து எனக்கு வேலைவைத்துவிட்டான்’
  ‘எனக்கு வேலைவைக்காமல் நீங்களே கணக்கைச் சரிபார்த்துவிடுங்கள்’

 • 2

  (ஒன்று) அதிக உழைப்பை வேண்டுவதாக அல்லது அதிக சிரமத்தைத் தருவதாக இருத்தல்.

  ‘படத்தின் இறுதிக் காட்சிதான் எனக்கு நிறைய வேலை வைத்துவிட்டது என்று அந்த இயக்குநர் தன் பேட்டியில் கூறியிருந்தார்’
  ‘வீடு முழுவதும் சுத்தம் செய்தாயிற்று. பரண்தான் ரொம்ப வேலை வைத்துவிட்டது’