தமிழ் ஹைதர் காலம் யின் அர்த்தம்

ஹைதர் காலம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் நவீனம் அல்லாதது என்ற பொருளில் பயன்படுத்தும் போது) மிகப் பழைய காலம்.

    ‘இந்த ஹைதர் காலத்து சைக்கிளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக ஒன்று வாங்கக் கூடாதா?’
    ‘வேட்டி கட்டுவது ஹைதர் காலத்துப் பழக்கம் என்று என் மகன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தான்’