தமிழ் -அற்ற யின் அர்த்தம்

-அற்ற

இடைச்சொல்

 • 1

  ‘இல்லாத’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் சேர்ந்து பெயரடை ஆக்கும் இடைச்சொல்.

  ‘நீரற்ற குளம்’
  ‘பயனற்ற வேலை’
  ‘சுவையற்ற உணவு’

 • 2

  ‘(அளவு, எண்ணிக்கை முதலியவற்றை) மீறிய’, ‘கடந்த’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் சேர்ந்து பெயரடை ஆக்கும் இடைச்சொல்.

  ‘எண்ணற்ற’
  ‘கணக்கற்ற’
  ‘அளவற்ற’