தமிழ் -ஆய் யின் அர்த்தம்

-ஆய்

இடைச்சொல்

 • 1

  ஆக¹ என்பதன் (ஐந்தாவது, ஆறாவது, எட்டாவது பொருளைத் தவிர்த்து மற்ற) எல்லாப் பொருளிலும் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘குழந்தை அழகாய்ச் சிரித்தது’
  particle used in all the senses of -ஆக (except 5, 6 and 8).
  ‘மனம் பஞ்சாய்ப் பறந்தது’
  ‘அவருக்குக் கோபம்கோபமாய் வந்தது’
  ‘அவர் எனக்குப் பணம் தருவதாய்ச் சொன்னார்’