தமிழ் -ஆறு யின் அர்த்தம்

-ஆறு

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘-படி’ என்ற பொருளில் ஒரு பெயரெச்சத்தின் பின் சேர்ந்து வினையடையை உருவாக்கும் இடைச்சொல்; ‘-வண்ணம்’.

    ‘நான் சொன்னவாறு செய்திருந்தால் இந்தத் தொல்லை ஏற்பட்டிருக்காது’
    ‘நடக்கிறவாறு நடக்கட்டும்’
    ‘அவன் நாள் முழுதும் புத்தகம் படித்தவாறு இருந்தான்’