தமிழ் -ஏ யின் அர்த்தம்

-ஏ

இடைச்சொல்

 • 1

  ஒருவர் தான் சொல்வதற்குக் கூடுதல் அழுத்தம் தரப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘இது அமெரிக்காவிலேயே பெரிய தொழிற்சாலை’
  ‘எங்கள் ஊரிலேயே ஒரு பொறியியல் கல்லூரி உள்ளது’
  ‘நேரத்திலேயே வீட்டுக்கு வந்துவிடு’
  ‘ஐந்து ஓட்டங்களிலேயே தோனி ஆட்டம் இழந்தார்’
  ‘அவனை ஏன் ஒதுக்குகிறீர்கள்? அவனும் நம்மில் ஒருவன்தானே’
  ‘வீட்டில் அப்பா இருக்கிறாரா? இருக்கிறாரே’
  ‘உன் அண்ணன் இருக்கிறானா? இல்லையே’
  ‘நீங்களா என்னைக் கூப்பிட்டீர்கள்? ஆம், நானேதான் கூப்பிட்டேன்’
  ‘அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்’
  ‘ஐந்தே நிமிடத்தில் ஓவியர் என் படத்தை வரைந்துவிட்டார்’
  ‘நூறே ரூபாயில் இந்த வேலையை முடித்துத் தருகிறேன்’
  ‘அவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாரே’
  ‘அவர் ஊருக்குப் போய்விட்டாரே’
  ‘அவரை நான் அடிக்கடி பார்ப்பேனே’
  ‘உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே’

 • 2

  பதற்றம், கவலை போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நாளைக்கு அவர் பத்திரத்தில் கையெழுத்து போட வர வேண்டுமே’
  ‘மகன் இப்படி மக்காக இருக்கிறானே என்று அவருக்கு வருத்தமாக இருந்தது’