தமிழ் -ஏனும் யின் அர்த்தம்

-ஏனும்

இடைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ‘-ஆவது’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘யாரேனும் அவருக்குத் துணையாகப் போகக் கூடாதா?’
  ‘அவரேனும் இதைச் சொல்லியிருக்கலாம்’
  ‘ஏதேனும் சாப்பிடக் கொடுங்கள்’

 • 2

  உயர் வழக்கு எதிர்மறை வாக்கியங்களில் ‘கூட’ என்னும் பொருளில் வரும் ஒரு இடைச்சொல்.

  ‘இம்மியேனும் பாறை அசையவில்லை’