தமிழ் -காரன் யின் அர்த்தம்

-காரன்

இடைச்சொல்

 • 1

  செய்பவன், உரியவன், உடையவன், தொடர்புடையவன், சார்ந்தவன் முதலிய பொருள்களில் ஒரு பெயர்ச்சொல்லோடு இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘காவல்காரன்’
  ‘ஆத்திரக்காரன்’
  ‘வண்டிக்காரன்’
  ‘மதுரைக்காரன்’

 • 2

  ஆணுக்கு உரிய சில உறவுமுறைச் சொற்களோடு இணைந்து, அவரை அலட்சியமாகக் குறிப்பிடுவதற்குப் பயன்படும் இடைச்சொல்.

  ‘அவன் அண்ணன்காரன் என்ன சொன்னான்?’
  ‘உன் அப்பன்காரன் இப்படி மோசம் செய்வான் என்று நான் நினைக்கவில்லை’