தமிழ் -தான் யின் அர்த்தம்

-தான்

இடைச்சொல்

 • 1

  குறிப்பிட்டவரை அல்லது குறிப்பிட்டதைத் தவிர வேறு எவரும் அல்லது எதுவும் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்லப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அறையில் எத்தனையோ பேர் இருந்தார்கள். இவன்தான் திருடினான் என்று எப்படிச் சொல்கிறாய்?’
  ‘பரிசு கிடைத்தது என் தம்பிக்குத்தான், எனக்கல்ல’
  ‘இந்த விஷயம் நேற்றுதான் எனக்குத் தெரியும்’
  ‘அடுத்த ஆண்டுதான் வீட்டை விற்கப்போகிறோம்’
  ‘அப்பா வந்த பிறகுதான் நீ போகலாம்’
  ‘விபத்தில் கால் போனால் போனதுதான்’
  ‘‘நீங்கள்தானே வீட்டுக்காரர்?’ ‘ஆமாம், நானேதான்’’
  ‘இதைப் பேச எனக்கு உரிமை இல்லைதான்’